Thursday, September 8, 2011

கூரைத் தகட்டின் கீழே என் உலகம்


உடைந்த சுவர் ஒன்றில்

குறுக்கும் நெடுக்குமாகப் புறப்பட்ட

வெடிப்புக்கீறல்களில் தோன்றி மறையும் என் குழந்தையின் முகம்


கீச்சிடும் பறவைக்குஞ்சுகளின் மொழி நெஞ்சையள்ளும்

தூரத்தே எழும் பள்ளிக்குழந்தைகளின் ஒருமித்த குரல்கள்

வாழ்வை அர்த்தமிழக்க வைக்கும்


தூரப்பயணத்தின் முடிவில் வெறும் கையோடு

வீடடையும்போது கையிலிருக்கும் பணம்

யாருமற்ற தனிமையைச் சொல்லியழும்


என் எல்லாம் அழிந்த பின்னும் தோற்றுக்கொண்டிருக்கிறேன்

ஒரு கூரைத்தகட்டின் கீழே

என் உலகம் இருக்குமென்னும் நம்பிக்கையிடம்.

0 comments:

Post a Comment