Wednesday, September 14, 2011

சூரியப் புதையல்


நேற்று நடுப்பகல் ஓரு சூரியனை மண்போட்டு மூடினேன்
மனிதாபிமானமாக அதன் ஒளியைத் தடைசெய்தேன்

சூரியப் புதையல் பற்றிய நினைவு வெகுநாட்களைப் பாழாக்கும்
அதற்காகவே சூரிய ஓவியங்களைப் பத்திரப்படுத்திக்கொண்டிருக்கிறேன்

அரையிருட்டில் மனம் நொருங்கி வாடையெழுகிறது
பின்னர் அந்த இடம் இயல்பாகிறது

நெடுஞ்சாலைப் பயணமொன்றில் அல்லது
பெருநகரொன்றை விட்டு விலகுகையில்
நான் தடுமாறக்கூடும் ஆதலால் தான் சொல்கிறேன்
இது கால ஒளித்தடையென்று

என் காலத்தில் புழுதிகொதிக்குமெனும் நினைவெழாது
பகலென்றும் இரவென்றும் கொண்டாடிய சொற்கள்
நழுவிப் பின் அதன் மரணத்தைக் கொண்டாடும்

எதற்காகவோ காமம் கொண்ட உடலங்கள்
இருளினுள்ளே விரைந்து கொண்டேயிருக்கும் அவற்றின்
தீரா வேட்டைச் சுனையில் மறைந்து கிடக்கிறது
ஒளியடங்கிய நிலத்தின் ருசி

புராணக்கடவுளாய் நீங்கள் உரைத்த வடிவம் அதோ
என் உள்ளங்கை மண்ணால் மூடுண்டு கிடக்கிறது

கோடியாண்டுகளாய் ஒளிர்ந்த சூரியனின்
விடுபடுதலைக் கொண்டாட ஆணிலிங்கங்கள் எழும்புகின்றன.

0 comments:

Post a Comment