சில்வெஸ்ட்டரின் அறை அழுக்காய் இருக்கிறது
அவருடைய நாற்காலி ஒருக்கழித்திருக்கிறது
அவரது உள்ளாடை வெளி யன்னல் கம்பிகளில் சுருண்டு கிடக்கிறது
படுக்கைவிரிப்புக்களிலிருந்து மக்கிப்போன மணம் கிளம்புகிறது
விளக்கிலிருந்து புறப்படும் ஒளி திருப்தி தருவதாக இல்லை
அவருடைய துவாய் கிழிந்தபடி ஒரு மூலையில் கிடக்கிறது
மேலும் ஒரு ரவிக்கை தொலைக்காட்சிப்பெட்டிக்கு அடியில்
சிக்கிக் கிடக்கிறது
அவருடைய கவனக்குறைவால் இரண்டு வௌவால்கள்
அறையின் உள்ளே குடியேறிவிட்டன
அவரது புத்தகங்கள் நடு அறையில்
மறைவாகத் தம்மை இறுக்கிக் கொண்டு நெரிகின்றன
அவருடைய கட்டிலில் மொக்கட்டயன் பூச்சி நித்திரை கொள்கிறது
மற்றும் அவருடைய மணத்தையுடைய ஒரு ஈ
அங்கே சுற்றிக்கொண்டிருக்கிறதுஇல்லாவிட்டால்
தப்பித்தலுக்கான வழிதெரியாமல் மாட்டிக்கொண்டுள்ளது
வர்ணம் குறைந்த பக்கச்சுவரில் ஒரு நவீன ஓவியம்
புரிதலின்றித் தொங்கிக்கொண்டிருப்பதாக அலுத்துக்கொள்கிறது
அந்த அறை வெட்கப்படவேண்டும்
ஏனெனில் சில்வெஸ்ட்டரின் அறை அழுக்காய் இருக்கிறது
இவை போன்றவற்றைத்தான் நான் அங்கு பார்த்து அறிந்து கொண்டேன்.
0 comments:
Post a Comment